இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கவுன்டி கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
2018-ல் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதற்குத் தயாராகும் வகையில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட அஸ்வின் முடிவு செய்தார். இதையடுத்து அவர் வார்செஸ்டர்ஷையர் அணிக்காகக் களமிறங்கியுள்ளார்.
நேற்று முடிந்த குளோசெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் பங்கேற்ற வார்செஸ்டர்ஷையர் அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கில் இரு இன்னிங்ஸ்களிலும் 36, 28 ரன்கள் எடுத்த அஸ்வின் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார்.
கவுண்டி கிரிக்கெட் சார்பாக அதன் சமூகவலைத்தளத்தில் அஸ்வினின் 5 விக்கெட்டுகளின் வீடியோ வெளியிடப்பட்டு, அஸ்வின் இங்கு நன்றாக உள்ளார் என்று பிசிசிஐக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் அஸ்வினின் பங்களிப்பு
பேட்டிங்
36 & 28
பந்துவீச்சு
3/94 (29 ஓவர்கள்) & 5/68 (34 ஓவர்கள்)
1 கேட்ச்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


