திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

ரெய்னாவை நேரில் சந்தித்து ஊக்கம் அளித்த சச்சின்!

துலீப் டிராபிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரெய்னாவை நேரில் சந்தித்து ஊக்கம் அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:47 pm

எழில்

சுரேஷ் ரெய்னா, தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் இல்லை, ஒருநாள் அணியிலும் இல்லை. 

அவர் தற்போது துலீப் டிராபி போட்டிக்கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா. தவிரவும் சென்னையில் நடைபெறும் புச்சிபாபு போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். 

இந்திய அணிக்காக 223 ஒருநாள் போட்டிகளிலும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடிய ரெய்னா இவ்விரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதில் ஆவலாக உள்ளார். 

துலீப் டிராபி லக்னோவில் செப்டம்பர் 7 முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ரெய்னா. 

இந்நிலையில் துலீப் டிராபிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரெய்னாவை நேரில் சந்தித்து ஊக்கம் அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதை முதலில் ட்விட்டரில் பதிவு செய்தார் சச்சின். 

என் மீது நம்பிக்கை வைக்க எப்போதும் நீங்கள் உதவியுள்ளீர்கள். உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி என ரெய்னா சச்சினுக்குப் பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.