வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லயனின் அற்புதமான பந்துவீச்சால் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லயன் அற்புதமாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்டில் ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் 29 வயது லயன். ஆசியாவில் ஒரு டெஸ்டில் 13 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் 2017-ல் ஜடேஜா, அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
2017-ல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்
46 லயன் (7 டெஸ்டுகள்)
44 ஜடேஜா (7)
44 அஸ்வின் (8)
39 ரபடா (8)
ஆசியாவில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சு
13/154 நாதன் லயன் vs வங்கதேசம், 2017
12/70 ஓ’ கீஃப் vs இந்தியா, 2017
2 டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள்
23 - ஹெராத் vs பாகிஸ்தான், 2014
22 - முரளிதரன் vs தென் ஆப்பிரிக்கா, 2006
22 - நாதன் லயன் vs வங்கதேசம், 2017
ஒரே வருடத்தில் ஆசியாவில் 5 முறை 5 விக்கெட்டுகள்
ஷேன் வார்னே (2004)
நாதன் லயன் (2017)
* ஷேன் வார்னே vs இலங்கை, 2004 ( தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகள்)
நாதன் லயன் vs வங்கதேசம் 2017 (தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


