கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி: இறுதிச்சுற்றில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் - மேடிசன் கீஸ் மோதல்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் வீனஸ் வில்லியம்ஸையும்...

News image
மேடிசன் கீஸ்
Updated On :29 ஜனவரி 2024, 4:50 pm

எழில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் வீனஸ் வில்லியம்ஸையும் மேடிசன் கீஸ் கோகோ வான்டெவெக்கையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான இதில், மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்று ஒன்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸும் சகநாட்டவரான ஸ்லோனே ஸ்டீபன்ஸும் மோதினார்கள். மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற போட்டியில் 6-1, 0-6, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் மற்றும் கோகோ வான்டெவெக் ஆகியோர் மோதினார்கள். இதில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் மேடிசன் கீஸ்.

அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் ஸ்லோனே ஸ்டீபன்ஸ், மேடிசன் கீஸ் ஆகிய இருவருக்குமே இது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாகும்.

ஸ்லோனே ஸ்டீபன்ஸ்

ஸ்லோனே ஸ்டீபன்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.