மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டி வருகிற 17-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் திரும்பி உள்ளனர். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின் மற்றும் ரவிந்தர் ஜடேஜா ஆகியஇருவருக்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்த இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ரஹானே, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்டே, அக்ஸர் படேல், யஜூவேந்திரா ஷாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


