சுடச்சுட

  

  அதிவேகமாக 150 விக்கெட்டுகள்: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை!

  By Raghavendran  |   Published on : 05th August 2017 06:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jadeja1

   

  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

  ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜடேஜா, இந்த மைல்கல்லை எட்ட 32 போட்டிகளை எடுத்துக்கொண்டார். 29 டெஸ்ட் போட்டிகளிலேயே 150 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

  இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெறும் 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தனஞ்செய் டீ சில்வா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இச்சாதனையைப் படைத்தார்.

  முன்னதாக, 34 டெஸ்ட் போட்டிகளில் எர்ரப்பள்ளி பிரசன்னா மற்றும் அனில் கும்ப்ளேவும், 35 டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் சிங் ஆகியோர் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

  அதுபோல, டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இந்திய இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்தார். 

  இதுதவிர, வினு மான்கட் 40 டெஸ்ட் போட்டிகளிலும், பிஷன் சிங் பேடி 41 டெஸ்ட் போட்டிகளிலும், ரவி சாஸ்திரி 78 டெஸ்ட் போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டிய இதர வீரர்கள் ஆவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai