தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன்: ஸ்மித் அறிவிப்பு!
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று ஸ்மித் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து...


3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பிய ஸ்மித், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க அண்மையில் பேட்டியளித்தார். அது அவருக்குப் பல்வேறு தரப்புகளில் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று ஸ்மித் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:
என்ன செய்தாவது இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டு ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று எண்ணுகிறேன். இதன்மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், நடந்த சம்பவங்களுக்கு ஒரு கேப்டனாக நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். எனவே என் மீதான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை. இந்தத் தீர்ப்பின் மூலம் தன்னுடைய வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த எண்ணுகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் அடுத்த வருடம் ஏப்ரலுக்குப் பிறகுதான் கிரிக்கெட் ஆடுகளத்தில் ஸ்மித்தால் களமிறங்கமுடியும். அதற்கடுத்த இரு மாதங்களில் இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...