சீனாவுடனான டேவிஸ் கப் டென்னிஸ் தகுதிச்சுற்று போட்டியில் லியாண்டர் பயஸ் உலக சாதனை புரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
சீனாவின் டியான்ஜின் நகரில் 2 நாள்கள் டேவிஸ் கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. இதில் இந்திய அணி இரட்டையர் பிரிவில் 44 வயது லியாண்டர் பயஸ் பங்கேற்கிறார். அவர் ஏற்கெனவே இரட்டையர் பிரிவில் 42 வெற்றிகளை பெற்றுள்ளார். இத்தாலியின் நிக்கோலா பிட்ரான்சலியுடம் 42 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் சீனாவுடன் நடைபெறும் போட்டியில் லியாண்டர் பயஸ் ஒரு வெற்றியை பெற்றால் உலக சாதனையை நிகழ்த்துவார்.
ஏற்கெனவே 2017-இல் இந்தியா-நியூஸிலாந்து, உஸ்பெகிஸ்தான் இடையே நடந்த டேவிஸ் கப் போட்டிகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் லியாண்டர் பயஸால் இச்சாதனையை நிகழ்த்த முடியவில்லை. இதுதொடர்பாக பயஸ் கூறியதாவது:
சீனாவுடன் மோதும் போட்டிகள் சவாலாக திகழும். சிறந்த இரட்டையர் அணியை அவர்கள் பெற்றுள்ளனர். 29 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சாதனை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. போபண்ணாவுடன் இணைந்து சிறப்பாக விளையாட முடியும் என பயஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசுத் துறைகளில் வேலை: எழுத்துத் தேர்வுக்கு 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


