முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காமன்வெல்த் கேம்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் குருராஜா!

இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 56 கிலோவுக்கான பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கம் பெற்றார்...

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 10:34 am IST

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் 23 விளையாட்டுப் பிரிவுகளில் 275 தங்கப் பதக்கங்களை கைப்பற்ற போட்டியிடுகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் உள்பட மொத்தம் 64 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள முதல் பதக்கம் இது. மொத்தமாக 261 கிலோ (ஸ்னாட்ச்+கிளின் அன்ட் ஜெர்க்) எடையைத் தூக்கிய மலேசியாவின் முகமது இஷார் தங்கப் பதக்கம் பெற்றார். கர்நாடகத்தைச் சேர்ந்த குருராஜா மொத்தமாக 249 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார். 

பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. 53 நாடுகளே உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.