ஐபிஎல் கேப்டன்கள் சந்திப்பு! (படங்கள்)
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது...


அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க ஆட்டத்துக்கு முன்பு, போட்டிகளின் தொடக்க விழா நடைபெறுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், வாணவேடிக்கைகளுடன் திருவிழா நடக்கிறது. சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடக்க விழா ஆரம்பித்கவுள்ளது. 90 நிமிடங்கள் நடைபெறும் தொடக்க விழாவில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் ஹிர்த்திக் ரோஷன், பர்ணீதி சோப்ரா, தமன்னா, வருண்தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ், ஆகியோர் பங்கேற்று கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் கேப்டன்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தோனி, கம்பீர், கோலி, அஸ்வின், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, ரஹானே, கேன் வில்லியம்சன் ஆகியோர் பங்கேற்றார்கள். ஐபிஎல் கோப்பையின் முன்பு நின்று அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...