சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவின் வெங்கட் ராகுல் தங்கம் வென்றார்!

இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு பளு தூக்குதலில் கிடைக்கும் 4-வது தங்கம் இது...

News image
Updated On :7 ஏப்ரல் 2018, 12:15 pm

எழில்

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

அதற்கேற்ப தொடக்க நாளான வியாழக்கிழமை பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனையுடன் முதல் தங்கத்தை வென்றார். ஆடவர் பிரிவில் பி.குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். 2-வது நாளான வெள்ளிக்கிழமையும் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் தங்கள் முத்திரையை பதித்தனர். பெண்கள் 53 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா சானு ஸ்நாட்ச் பிரிவில் 84 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 108 கிலோவும் என மொத்தம் 192 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கமாக அமைந்தது. ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தீபக் லேதர் மொத்தம் 295 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். 

Story image

இன்றும் பளு தூக்குதலில் தங்க வேட்டை நடத்தியது இந்திய அணி. தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இது இவருடைய இரண்டாவது காமன்வெல்த் கேம்ஸ் தங்கமாகும். 2014-ல் நடந்த போட்டியிலும் அவர் தங்கம் வென்றார். இன்று மொத்தமாக 317 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

இதையடுத்து பளு தூக்குதலில் இந்தியாவுக்கு இன்று மற்றொரு தங்கம் கிடைத்தது. ஆடவர் 85 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா மொத்தமாக 338 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு பளு தூக்குதலில் கிடைக்கும் 4-வது தங்கம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.