சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் ஸ்மித், வார்னருக்கு இடமில்லை!

2018-19-ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா...

News image
Updated On :11 ஏப்ரல் 2018, 6:32 am

எழில்

2018-19-ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

20 வீரர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் முக்கிய வீரர்களான ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. கடந்த வருடப் பட்டியலில் இடம்பிடிக்காத டிம் பெயின், இந்த வருடம் இடம்பிடித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுடைய பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அணியின் ஒப்பந்தப் பட்டியல்

அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரே, பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிட் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், க்ளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெயின், மேத்யூ ரென்ஷா, ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.