பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

சர்வதேச சதுரங்கப் போட்டியில் 7-ஆம் வகுப்பு மாணவர் முதலிடம்

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.

News image

முதலிடம் பெற்ற முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் பிரக்ஞானந்தா.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:08 am IST

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.
இப்போட்டிகள் கிரீஸ் நாட்டில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றன. மாணவர் பிரக்ஞானந்தா 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் தகுதி பெறுவதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 3 நிலைகளில் 2 நிலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து முதல் பரிசுக்குரியவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனை படைத்த மாணவர் பிரக்ஞானந்தாவை பள்ளி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.