மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

2019 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணை

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 3:19 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிரிட்டனில் அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

1992 உலகக் கோப்பை போட்டி போல இதிலும் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் குறைந்தபட்சம் ஒருமுறையாவது மோதவேண்டும். இதனால் இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும் 9 லீக் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். 

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று ஜூலை 14-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள போட்டிகளின் அட்டவணை:

ஜூன் 5-ஆம் தேதி, புதன்கிழமை - தென் ஆப்பிரிக்கா - சௌத்தாம்ப்டன் மைதானம்

ஜூன் 9-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை - ஆஸ்திரேலியா -  தி ஓவல் மைதானம்

ஜுன் 13-ஆம் தேதி, வியாழக்கிழமை - நியூஸிலாந்து - நாட்டிங்காம் மைதானம்

ஜுன் 16-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை - பாகிஸ்தான் - மான்சஸ்டர் மைதானம்

ஜுன் 22-ஆம் தேதி, சனிக்கிழமை - ஆஃப்கானிஸ்தான் - சௌத்தாம்ப்டன் மைதானம்

ஜுன் 27-ஆம் தேதி, வியாழக்கிழமை - மேற்கிந்திய தீவுகள் - மான்சஸ்டர் மைதானம்

ஜுன் 30-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை - இங்கிலாந்து - பர்மிங்கம் மைதானம்

ஜுலை 2-ஆம் தேதி, செவ்வாய்கிழமை - வங்கதேசம் - பர்மிங்கம் மைதானம்

ஜுலை 6-ஆம் தேதி, சனிக்கிழமை - இலங்கை - லீட்ஸ் மைதானம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.