சென்னை வெற்றி: தில்லி போராடி தோல்வி
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடியும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி தோல்வியடைந்தது.


சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடியும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி தோல்வியடைந்தது.
தில்லி டேர் டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 30-வது ஆட்டம் புணேவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சென்னையும், கடைசி இடத்தில் தில்லி அணியும் உள்ளன. முன்னதாக டாஸ் வென்ற தில்லி அமி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னையின் ஷேன் வாட்சன்-டு பிளெஸிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு இணைந்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். டு பிளெஸிஸ் 33 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா ரன் ஏதுமின்றியும் வீழ்ந்தனர். 7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 78 ரன்களை குவித்த நிலையில் வாட்சன் ஆட்டமிழந்தார். ராயுடு 41 ரன்களில் வீழ்ந்தார். கேப்டன் தோனி 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன், 22 பந்துகளில் 51 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 211 ரன்களை எடுத்திருந்தது. தில்லி தரப்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தில்லி அணியின் பிரித்வி ஷா, காலின் மன்றோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிரித்வி, ஆசிப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் காலின் மன்றோவுடன்-கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்து விளையாடினார்.
மன்றோ 26 ரன்களிலும், ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 6 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார். பின்னர் ரிஷப் பந்த்-விஜய் சங்கர் இணைந்து நிதானமாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.
ரிஷப் பந்த், விஜய் சங்கர் அரை சதம் வீண்: ரிஷப் பந்த் 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 5 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 54 ரன்களுடனும், ராகுல் 3 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20-வது ஓவர் முடிவில் தில்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
சென்னை அணி தரப்பில் ஆசீப் 2 விக்கெட்டையும், லுங்கி கிடி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தனி நபராக விஜய் சங்கர் போராடியும் தில்லியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை.
மீண்டும் முதலிடம் பெற்ற சென்னை: புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை அணி, தற்போதைய வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
இன்றைய ஆட்டம்
பெங்களூரு-மும்பை
நேரம்: இரவு 8.00.
இடம்: பெங்களூரு.
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...