சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

10 விக்கெட்டுகளும் எடுத்து சாதனை படைத்த 18 வயது மணிப்பூர் வீரர்! விடியோ வெளியிட்டது பிசிசிஐ!

18 வயது இடக்கைப் பந்துவீச்சாளரான ரெக்ஸ் சிங்கின் 10 விக்கெட்டுகளில் ஐந்து விக்கெட்டுகள் க்ளீன் போல்ட் செய்ததன்...

News image
Updated On :13 டிசம்பர் 2018, 8:37 am

எழில்

ஸ்கோர்கள்: அருணாசல பிரதேசம் 138 & 36 (ரெக்ஸ் ராஜ்குமார் சிங் 10/11) , மணிப்பூர் 122 (அபிஜீத் 48, கோவிந்த் மிட்டல் 5/50, டக்ரா 4/25) & 55/0 (ஷுபம் செளகான் 32*)

மணிப்பூர் இளம் வீரர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் புதிய சாதனை படைத்து கவனம் ஈர்த்துள்ளார். 

ஆனந்தபூரில் நடைபெற்ற கூச் பெஹர் யு-19 போட்டியில் அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 9.5 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் ரெக்ஸ் சிங். அருணாச பிரதேச அணி ரெக்ஸ் சிங்கின் அசத்தலான பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து இந்த இலக்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மணிப்பூர் அணி. 

18 வயது இடக்கைப் பந்துவீச்சாளரான ரெக்ஸ் சிங்கின் 10 விக்கெட்டுகளில் ஐந்து விக்கெட்டுகள் க்ளீன் போல்ட் செய்ததன் மூலம் கிடைத்தன. மூன்றுமுறை ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 

ரெக்ஸ் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்த ஆட்டத்தின் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பலரும் இதைப் பகிர்ந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.