மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

புவனேஸ்வர் நீக்கம்: ரசிகர்கள் கொந்தளிப்பு!

சமூகவலைத்தளங்களில் கோலியின் முடிவுகளுக்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள்...

News image
Updated On :13 ஜனவரி 2018, 9:27 am

எழில்

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது. டந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியா, முதல் டெஸ்டில் தோற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். தவனுக்குப் பதிலாக ராகுலும் புவனேஸ்வருக்குப் பதிலாக இஷாந்த் சர்மாவும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் ரோஹித் சர்மா அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

புவனேஸ்வர் குமார் கடைசியாக விளையாடிய இரு டெஸ்டுகளிலும் பிரமாதமாகப் பங்களிப்பு செய்துள்ளார். கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளும் எடுத்தார். எனினும் அவருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர் குமார், சஹா நீக்கம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. சமூகவலைத்தளங்களில் கோலியின் முடிவுகளுக்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட் நிபுணர்களுக்கும் கோலியின் விந்தையான இந்த முடிவுகள் வியப்பை அளித்துள்ளன.

இந்திய அணியின் இந்த முடிவுகள் எந்தளவுக்குப் பலனளிக்கும் என்பது இனிவரும் நாள்களில் தெரியவரும்.

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.