ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

74 ரன்களுக்குச் சுருண்ட பாகிஸ்தான்: நியூஸிலாந்து அபார வெற்றி!

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ரன்களுக்குச் சுருண்டது...

News image
Updated On :13 ஜனவரி 2018, 5:14 am

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து நியூஸிலாந்து அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டுனேடினில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.  கேன் வில்லியம்சன், டெய்லர் அரை சதமெடுத்து அசத்தினார்கள். வில்லியம்சன் 73 ரன்களிலும் டெய்லர் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ரயீஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Story image

இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 74 ரன்களுக்குச் சுருண்டது. 11-வதாகக் களமிறங்கிய முகமது ஆமிரும் கேப்டன் சர்பராஸ் அகமதுவும் அதிகபட்சமாக 14 ரன்கள் எடுத்தார்கள். நியூஸிலாந்தின் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

3-வது ஒருநாள் போட்டியை 183 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து அணி ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.