காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சிஎஸ்கே தவிர வேறொரு அணியில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை: தோனி திட்டவட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர வேறொரு அணியில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை என்று தோனி கூறியுள்ளார்...

News image
Updated On :19 ஜனவரி 2018, 9:54 am

எழில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர வேறொரு அணியில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை என்று தோனி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தோனி கூறியதாவது:

தங்கள் அணியில் என்னைத் தக்கவைக்க பல அணிகளும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சிஎஸ்கே-வுக்கு மீண்டும் விளையாடாமல் இருப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

இதற்கு அனைத்து விஷயங்களும் காரணம். இதுவரை கடந்த தருணங்கள், நாம் நடந்துகொண்ட விதம், நிர்வாகம் எப்படி நடந்துகொண்டது, வீரர்கள் எப்படி, ரசிகர்கள் எப்படி... போன்ற விஷயங்கள் முக்கியக் காரணம். சென்னை எனக்கு இரண்டாவது தாய் வீடு. ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவராக எண்ணுகிறார்கள். இதைவிடவும் ஒரு சிறந்த பாராட்டு தேவையில்லை. எனவே இது எனக்குச் சிறப்புமிக்க இடம். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டுவிட்டு இன்னொரு அணியை என்னால் நினைக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடினார்கள்.

இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இந்த சீசன் முதல் மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, எம்.எஸ்.தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரை தனது அணியில் தக்க வைத்துக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.