இந்தியாவுக்கு எதிரான தெ.ஆ. ஒருநாள் அணி அறிவிப்பு! இரு புதிய முகங்களுக்கு வாய்ப்பு!
முதல் 3 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது...


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்த அணி. இதனால், தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் இந்தியாவின் 26 ஆண்டு கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 1 முதல் தொடங்கவுள்ளது. இதற்கான முதல் 3 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லுங்கி என்ஜிடி, காயா ஸோண்டோ ஆகியோர் புதிதாக ஒருநாள் அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். ஃபர்ஹான் பெஹர்தீன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி
ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹசீம் ஆம்லா, குவிண்டன் டி காக், டி வில்லியர்ஸ், ஜேபி டுமினி, இம்ரான் தாஹிர், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், மார்னே மார்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி என்ஜிடி, அன்டிலே பெலுக்வாயோ, ககிசோ ரபாடா, ஷம்ஸி, காயா ஸோண்டோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...