புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

இந்த எளிதான இலக்கை 10.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு அடைந்தது ஆஸ்திரேலியா.

News image
Updated On :2 ஜூலை 2018, 12:18 pm

ஹராரேவில் நடைபெற்ற டி20 முத்தரப்பு போட்டியின் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா.

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்தது பாகிஸ்தான்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷதாப் கான் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். ஆஸியின் ஸ்டேன்லேக் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த எளிதான இலக்கை 10.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு அடைந்தது ஆஸ்திரேலியா. கேப்டன் ஃபிஞ்ச் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அபாரமாகப் பந்துவீசிய ஸ்டேன்லேக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.