தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சமபலத்துடன் பிரான்ஸ்-பெல்ஜியம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறும் பிரான்ஸ்-பெல்ஜிய அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் கோல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:41 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறும் பிரான்ஸ்-பெல்ஜிய அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் கோல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் பிரேஸில் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. 
இந்நிலையில் செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் சிறந்த முன்கள தாக்குதல் ஆட்டக்காரர்கள் உள்ள நிலையில் கோல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 
கடந்த 1986-இல் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-4 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. அதன் பின் இரு அணிகளும் 8 நட்பு ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் பெல்ஜியம் 2 முறை வென்றுள்ளது. இரண்டாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பையில் இளம் வீரர்களை அதிகம் கொண்ட இரண்டாவது அணியாக பிரான்ஸ் உள்ளது. 19 வயது முன்கள வீரர் மாப்பே, தாக்குதல் ஆட்டக்காரர்கள் பவேர்ட், லுகாஸ் ஹெர்ணான்டஸ் ஆகியோர் இதில் பிரதானமாக உள்ளனர். கிரைஸ்மேன், போக்பா, போன்ற முன்கள வீரர்கள் எதிரணியின் தற்காப்பு ஊடுருவி கோலடிக்கும் திறன் பெற்றவர்கள். 
1998-இல் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த டெஸ்சாம்ப்ஸ் தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரின் கீழ் கட்டுக்கோப்பான துடிப்பான அணியாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் ராபர்ட்டோ மார்டினெஸ் தலைமையில் பெல்ஜிய அணி உலகக் கோப்பையை எவ்வாறு எதிர்கொள்ளும் என சந்தேகம் எழுந்த நிலையில் அந்த அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வீரர்களின் தனிப்பட்ட திறமையை ஒட்டுமொத்த அணியின் திறமையாக மாற்றி மார்டினெஸ் சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக இருந்த தியரி ஹென்றி தற்போது பெல்ஜியத்தின் துணை பயிற்சியாளராக உள்ளார். தாக்குதல் ஆட்ட முறையை பலப்படுத்திய ஹென்றியால் பெல்ஜிய அணி இதுவரை 14 கோல்களை அடித்துள்ளது. 
பெல்ஜிய கோல்கீப்பர் திபாட் கோர்டோய்ஸ், பிரான்ஸின் ஹியுகோ லோரிஸ் ஆகியோர் எதிரணியின் கோல் வாய்ப்புகளை தடுப்பதில் பிரதானமாக உள்ளனர். 
பெல்ஜியத்தின் தற்காப்பு வீரர் தாமஸ் மியுனியர் இல்லாததது பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.