விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் காலிறுதிக்கு இந்திய வீரர் டி விஜ் சரண்-ஏ.சிதக் இணை முன்னேறியுள்ளது. டி விஜ் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் செக் நாட்டின் 7-ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் வீழ்த்தினார். இதே போல் மற்றொரு ஆட்டத்தில் உலகின் 35-ஆம் நிலை வீராங்கனை எகடெரினா மகரோவா 3-6, 4-6 என நேர் செட்களில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
அதே நேரத்தில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என ரோடினாவையும், ஓஸபென்கோ 7-6, 6-0 என சாஸ்நோவிச்சையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர். கெர்பர், சிபுல்கோவா உள்ளிட்டோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.
ஏற்கெனவே முன்னணி வீராங்கனைகளான ஷரபோவா, பெட்ரா விட்டோவா, வோஸ்னியாக்கி, சிமோனா ஹலேப், ஸ்லோன், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தோல்வியுற்று வெளியேறி விட்டனர்.
காலிறுதியில் பெடரர், நடால்: ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 6-0, 7-5, 6-4 என நேர் செட்களில் மன்னாரினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரனோயிக் 6-3, 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் மெக்டொனல்டை வீழ்த்தினார். நடால், நிஷிகோரி, ஐஸ்னர், ஆண்டர்சன், டெல் பொட்ரோவும் காலிறுதிக்கு முன்னேறினர். இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் டி விஜ்-சிதக் இணை காலிறுதிக்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


