விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளை கரோலினா பிளிஸ்கோவா, எகடெரினா மகரோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் செக் நாட்டின் 7-ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் வீழ்த்தினார்.
இதே போல் மற்றொரு ஆட்டத்தில் உலகின் 35-ஆம் நிலை வீராங்கனை எகடெரினா மகரோவா 3-6, 4-6 என நேர் செட்களில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஏற்கெனவே முன்னணி வீராங்கனைகளான ஷரபோவா, பெட்ரா விட்டோவா, வோஸ்னியாக்கி, சிமோனா ஹலேப், ஸ்லோன், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தோல்வியுற்று வெளியேறி விட்டனர். 11 ஆம் நிலை வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் மட்டுமே பட்டத்துக்கான போட்டியில் உள்ள முன்னணி வீராங்கனை ஆவார்.
காலிறுதியில் பெடரர்: ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 6-0, 7-5, 6-4 என நேர் செட்களில் மன்னாரினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரனோயிக் 6-3, 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் மெக்டொனல்டை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


