சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இங்கிலாந்தைச் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் குல்தீப் யாதவ்: மகத்தான பல சாதனைகளை நிகழ்த்தினார்!

இடக்கைச் சுழற்பந்துவீச்சாளர்களின் மிகச்சிறந்த பந்துவீச்சை (6/25) நேற்று நிகழ்த்தியுள்ளார் குல்தீப்..

News image
Updated On :13 ஜூலை 2018, 10:56 am

கோலி, தோனி அல்ல, ரோஹித் சர்மாவும் அல்ல, இங்கிலாந்தின் ஒட்டுமொத்த அணியும் 23 வயது குல்தீப் யாதவின் பந்துவீச்சைக் கண்டு நடுங்குகிறது.

முதல் டி20, முதல் ஒருநாள் என இரு ஆட்டங்களில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளார் குல்தீப் யாதவ். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுக்க, ரோஹித் சர்மா 137 ரன்கள் குவித்தார். இருவருடைய அபாரமான பங்களிப்பினால் இந்திய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் வென்றுள்ளது. ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

குல்தீப் யாதவ் 6/25

- ஒருநாள் கிரிக்கெட்டில் இடக்கைச் சுழற்பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு
- இந்தியாவுக்கு வெளியே இந்திய வீரரின் சிறந்த சுழற்பந்துவீச்சு
- இங்கிலாந்துக்கு எதிரான சிறந்த சுழற்பந்துவீச்சு
- இங்கிலாந்தில் சிறந்த சுழற்பந்துவீச்சு
- இங்கிலாந்தில் 6 விக்கெட்டுகள் எடுத்த முதல் சுழற்பந்துவீச்சாளர்
 - இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் 

* இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடக்கை மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் குல்தீப். இதற்கு முன்பு பிராட் ஹாக், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, 2005-ல் 5/32 எனப் பந்துவீசியிருந்தார். அச்சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. 

* அதேபோல இடக்கைச் சுழற்பந்துவீச்சாளர்களின் மிகச்சிறந்த பந்துவீச்சை (6/25) நேற்று நிகழ்த்தியுள்ளார் குல்தீப். இதற்கு முன்பு 2007-ல், இந்தியாவின் முரளி கார்த்திக், மும்பையில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் 6/27 எனச் சிறப்பான பந்துவீச்சை நிகழ்த்தினார். அச்சாதனையை முறியடித்துள்ளார் குல்தீப். 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களின் சிறந்த பந்துவீச்சு

ஸ்டூவர்ட் பின்னி - 6/4
கும்ப்ளே - 6/12
நெஹ்ரா - 6/23
குல்தீப் யாதவ் - 6/25

இங்கிலாந்தில் சிறந்த ஒருநாள் பந்துவீச்சு

வக்கார் யூனுஸ் 7/36 
டேவிஸ் 7/51
கில்மர் 6/14 
குல்தீப் யாதவ் 6/25

இங்கிலாந்தில் சிறந்த ஒருநாள் பந்துவீச்சு: சுழற்பந்துவீச்சாளர்கள்

6/25 குல்தீப் யாதவ், 2018 
6/29 சனத் ஜெயசூர்யா, 1993)

இங்கிலாந்தில் தங்களது முதல் ஒருநாள் ஆட்டத்தை விளையாடிய வெளிநாட்டுச் சுழற்பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சு

6/25  குல்தீப் யாதவ், 2018 
4/21 அப்துல் காதிர், 1983
4/58 சயீத் அஜ்மல், 2010

* இந்தச் சுற்றுப்பயணத்தில் முதல் டி20-யில் குல்தீப் தனது சிறந்த பந்துவீச்சை (5/24) நிகழ்த்தினார். இங்கிலாந்தில் இந்திய வீரர்களில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச டி20 ஸ்கோரை எடுத்தார் ராகுல். ஆட்ட நாயகன் விருது குல்தீப் யாதவுக்குக் கிடைத்தது.

* முதல் ஒருநாள் ஆட்டத்தில் குல்தீப் தனது சிறந்த பந்துவீச்சை (6/25) நிகழ்த்தினார். . இங்கிலாந்தில் இந்திய வீரர்களில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை எடுத்தார் ரோஹித் சர்மா. ஆட்ட நாயகன் விருது குல்தீப் யாதவுக்குக் கிடைத்தது.

இடக்கை மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சு

ஒருநாள்: 6/25 - குல்தீப் யாதவ், 2018
டி20: 5/24 - குல்தீப் யாதவ், 2018

கடைசி 8 ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் (இந்தியா, இங்கிலாந்தில் தலா ஓர் ஆட்டம், தென் ஆப்பிரிக்காவில் 6 ஆட்டங்கள்)

3/42, 3/34, 3/20, 4/23, 2/51
4/57, 1/51, 6/25

குல்தீப் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

45 - குல்தீப் யாதவ்
38 - பூம்ரா
37 - சாஹல்
37 - அடில் ரஷித் 
37 - ரஷித் கான் 

குல்தீப் யாதவ்

ஒருநாள்: 21 ஆட்டங்கள், 45 விக்கெட்டுகள்
டி20: 12 ஆட்டங்கள், 24 விக்கெட்டுகள்
டெஸ்ட்: 2 ஆட்டங்கள், 9 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.