இன்றைய தினம் இப்படி அமையும் என்று பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக்கும் ஃபகார் ஸமானும் எண்ணியிருக்கமாட்டார்கள். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இருவரும் இணைந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்கள்.
புலாவயோவில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் தொடக்க வீரர்களான ஃபகார் ஸமானும் இமாம் உல் ஹக்கும் அதிரடியாக விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் கிடைத்தது. பிறகு 20 ஓவர்களில் ஸ்கோர் 113 ஆக உயர்ந்தது. 25 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தது. பிறகு 92 பந்துகளில் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார் ஃபகார் ஸமான். இதன்பிறகு அவர் மேலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 115 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இமாம் 112 பந்துகளில் சதம் அடித்தார்.
இருவரும் 287 ரன்களை எட்டியபோது உலக சாதனை படைத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்கள் என்கிற பெருமையை அடைந்தார்கள். இதற்கு முன்பு 2006-ல் லீட்ஸில் ஜெயசூர்யாவும் உபுல் தரங்காவும் இங்கிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. அதை இவர்கள் தாண்டியுள்ளார்கள். பிறகு இந்தக் கூட்டணி 300 ரன்களையும் தாண்டியது.
பிறகு, அணியின் ஸ்கோர் 304-ல் இருந்தபோது 42 ஓவரின் முடிவில் 113 ரன்களில் ஆட்டமிழந்தார் இமாம்.
பாகிஸ்தான் அணி 46 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்துள்ளது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


