கோலியைச் சமாளிக்க ஓய்வு பெற்ற வீரரைத் தேர்வு செய்யவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

கடந்த பிப்ரவரி மாதம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்தார். இனிமேல் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும்...
கோலியைச் சமாளிக்க ஓய்வு பெற்ற வீரரைத் தேர்வு செய்யவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

சென்னையில் 2016 டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் தான் அடில் ரஷித் கடைசியாக விளையாடியது. 10 டெஸ்டுகள் மட்டுமே விளையாடியுள்ள ரஷித், கடந்த பிப்ரவரி மாதம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்தார். இனிமேல் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்தார்.

ஆனால் தன்னுடைய ஓய்வு முடிவை மாற்றவேண்டிய நிலையில் உள்ளார் ரஷித். இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ரஷித் இடம்பெற வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ். இதுபற்றி அவர் கூறியதாவது:

தேர்வுக்குழுவைச் சேர்ந்த எட் ஸ்மித், ரஷித்திடம் பேசினாரா என எனக்குத் தெரியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாகப் பந்துவீசியதை அடுத்து அவர் டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? ஏற்கெனவே இந்தவருடம் இதுபோல நடைபெற்றுள்ளது. எனவே தேர்வுக்குழுவின் விவாதத்தில் ரஷித்தும் இடம்பெறுவார். ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுவது குறித்து ரஷித் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து ரஷித் கூறியதாவது: தற்போது நான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுகளில் (ஒருநாள், டி20) மட்டுமே கவனம் செலுத்துகிறேன். தேர்வுக்குழுவினர் என்மீது நம்பிக்கை வைத்து, இங்கிலாந்து அணி டெஸ்ட் அணிக்கு என்னைத் தேர்வு செய்தால் என் ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார். 10 டெஸ்டுகள் விளையாடியுள்ள ரஷித், 38 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். கோலி இவருடைய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டதால், மீண்டும்  டெஸ்ட் அணிக்குத் திரும்பவுள்ளார் ரஷித்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com