கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வங்கதேசத்திடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் தோல்வி

முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் தோல்வியடைந்தது.

News image
Updated On :24 ஜூலை 2018, 12:49 am IST

முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் தோல்வியடைந்தது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் வங்கதேச அணி ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தற்போது 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.
இதன் முதல் ஒரு நாள் ஆட்டம் பிராவிடென்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 279 ரன்களை குவித்தது. தமிம் இக்பால் 130, ஷகிப் அல் ஹசன் 97 ரன்களை குவித்தனர்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 231 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஷிம்ரோன் மட்டுமே 52 ரன்களை எடுத்தார். வங்கதேச வீரர் மொர்டஸா 4 விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.