வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆசியக் கோப்பை: இந்திய மகளிர் அணி மீண்டும் வெற்றி!

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில்...

News image
Updated On :4 ஜூன் 2018, 7:26 am

எழில்

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் மிதாலி ராஜ் இதில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

இந்திய அணியின் மோனா மேஷ்ராம் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். மந்தனா 29 ரன்கள் எடுத்தார். 

அடுத்ததாக விளையாடிய தாய்லாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஹர்மண்ப்ரீத் கெளர் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. 

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. முதலில் விளையாடிய இந்தியா 169 ரன்களை எடுத்தது. மலேசிய அணி வெறும் 27 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்திய அணி புதன் அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.