சிஓஏவின் அதிகாரத்தை குலைக்க முயற்சி

கிரிக்கெட் நிர்வாக குழுவின் (சிஓஏ)வின் அதிகாரத்தைக் குலைக்கவே பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தை கூட்டுகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கிரிக்கெட் நிர்வாக குழுவின் (சிஓஏ)வின் அதிகாரத்தைக் குலைக்கவே பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தை கூட்டுகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 20 மாநில சங்கங்கள் வேண்டுகோளின்படி வரும் 22-ஆம் தேதி சிறப்பு பொதுக் கூட்டத்தை கூட்டி சிஓஏவின் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என தற்காலிக செயலாளர் அமிதாப் செளத்ரி தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கான எந்த செலவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என சிஓஏ உத்தரவிட்டது. இதையடுத்து அமிதாப் செளத்ரி சிஓஏ தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து சிறப்பு பொதுக்கூட்டத்தை தடுக்க முயற்சிக்கிறது என புகார் கூறினார்.
இந்நிலையில் சிஓஏ தரப்பில் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பு பொதுக் கூட்டம் கூட்டபிசிசிஐக்கு அதிகாரம் இல்லை. சிஓஏவின் அதிகாரத்தை குலைக்கவே அக்கூட்டம் நடத்த முயற்சிக்கின்றனர். இது உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறானது. 
பிசிசிஐயின் பல்வேறு குழுக்கள் இயங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம். அதே நேரத்தில் சிஓúவின் செயல்பாடுகளில் தடைகள் வராத வண்ணம் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com