லண்டன்: பிறந்த நாள் கேக் வெட்டியதற்காக ரசிகர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1-ஆம் தேதி துவங்கி 3-ஆம் தேதி வரை ஹெடிங்லி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ரமீஸ் ராசா ஆகியயோர் வர்ணனையாளர்களாகப் பணியாற்றினார்கள்.
போட்டியின் இறுதி நாளான ஞாயிறு அன்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்த நாள். எனவே இதனைக் கொண்டாடும் பொருட்டு வக்கார் யூனிஸ் வர்ணனையாளர்கள் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஆனால் தற்பொழுது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றார்கள் இந்த சமயத்தில் வக்கார் யூனிஸ் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிறந்த நாள் கேக் வெட்டியதற்காக ரசிகர்களிடம் வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
வாசிம் அக்ரமின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். இது எங்கள் தரப்பில் தவறான நடவடிக்கை. மன்னியுங்கள்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இடதுசாரிகளுடன் இணைந்து முடிவு எடுப்போம்: திருமாவளவன்

வெற்றி பெற்ற தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?

கருப்புக்கு தணிக்கைச் சான்றிதழ்! கால அளவு என்ன?

தவெகவுக்கு தேமுதிக ஆதரவா? பிரேமலதா பதில்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


