மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சச்சினுக்கு என்ன பதில் அளிப்பது என நீண்ட நேரம் யோசித்தேன்: ரஷித் கான்

கோலியும் தோனியும்கூட என்னைப் பாராட்டினார்கள். அவர்கள் என்னைப் பாராட்டியபோது...

News image
Updated On :5 ஜூன் 2018, 11:00 am

எழில்

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப்-பின்போது கொல்கத்தா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் அணி இறுதிச் சுற்றில் நுழைந்தது. இந்த ஆட்டத்தில், சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தும், மேலும் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, ரஷித் கானைப் பாராட்டி சச்சின் ட்வீட் செய்ததாவது: 

ரஷித் கான் நல்ல சுழற்பந்துவீச்சாளர் என்று எப்போதும் எண்ணுவேன். ஆனால் தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர், உலகளவில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் ஒன்றுமில்லை. அவரிடம் பேட்டிங் திறமைகளும் உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம். அருமையான வீரர் என்று கூறினார். 

சச்சினின் இந்த ட்வீட் குறித்து ரஷித் கான் ஒரு பேட்டியில் கூறியதாவது:

சச்சின் ட்வீட் நம்பமுடியாத ஒன்று. அவருக்கு என்ன பதில் அளிப்பது என நீண்ட நேரம் யோசித்தேன். நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். கோலியும் தோனியும்கூட என்னைப் பாராட்டினார்கள். அவர்கள் என்னைப் பாராட்டியபோது என் தன்னம்பிக்கை வெகுவாக உயர்ந்தது. குறுகிய காலத்தில் இந்தளவுக்குச் சாதிப்பேன் என நினைக்கவில்லை. கனவு போல உள்ளது என்று கூறியுள்ளார். 

சரி, ரஷித் கான் என்ன பதில் கொடுத்தார் தெரியுமா? இதுதான்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.