வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் மடிசன் கீய்ஸ், தீம்

பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை மடிசன் கீய்ஸ் முதன்முதலாக தகுதி பெற்றுள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 7:16 pm

DIN

பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை மடிசன் கீய்ஸ் முதன்முதலாக தகுதி பெற்றுள்ளார்.
ரோலன்ட் காரோஸ் மைதானங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் நடந்து வருகிறது. தற்போது காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மடிசன் கீய்ஸும், கஜகஸ்தானின் புலின்ட்சேவாவும் மோதினர். இதில் மடிசன் கீய்ஸ் 7-6, 6-4 என நேர்செட்களில் புலின்ட்சேவாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இது மடிசன் கீய்ஸ் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும். 
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவும்-ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதினர். இதில் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் தீம் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சும், இத்தாலியின் செஹின்டாவோம் மோதினர்.
அரையிறுதியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்
மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் முதன்முறையாக தகுதி பெற்றுள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை நடந்த காலிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் டாரியா கஸ்டகினாவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.