புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை ரசிகர்கள் அளித்த வரவேற்பு! (படங்கள்)

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவின் குடும்ப உறுப்பினர்கள்...

News image
Updated On :27 ஜூன் 2018, 7:12 am

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். இதையடுத்து, உலகளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை. எனினும் இதற்கு முன்பு, இந்தியாவின் நெகி, 13 வருடம், 4 மாதம் 22 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அவருடைய சாதனையைத் தகர்த்து, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா. இதற்கு முன்பு, 10 வயதில் (10 வருடம் 9 மாதங்களில்) சர்வதேச மாஸ்டராகி சாதனை செய்தார்.

இத்தாயில் நடைபெற்ற கிரேடின் ஓபன் செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவின் குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர் ரமேஷ், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தார்கள். பிறகு தான் படிக்கும் வேலம்மாள் பள்ளிக்கும் சென்று சக மாணவர்கள், ஆசிரியர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா கூறியதாவது: 

3 வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். ஐந்து வயது முதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் ஆகியோருடன் விளையாட ஆவலாக உள்ளேன். 12 வயதில் கிராண்ட் மாஸ்டரானது மகிழ்ச்சியை அளிக்கிறது. இனிவரும் போட்டிகளில் வழக்கம்போல விளையாடி வெற்றி பெறுவேன் என்றார்.

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.