

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு பெரு நகரங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானங்கள் பயன்படுத்தப்படுவதால் தடகள வீரர்கள் அந்த மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்தார்.
ஐஎஸ்எல் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானம், பெங்களூரில் உள்ள மைதானம், தில்லியில் உள்ள மைதானம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக அஞ்சு பாபி ஜார்ஜ், தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது: பெங்களூரில் இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் உள்ள தடகள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து பயிற்சி மையம் அமைக்க ஐஎஸ்எல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளிடம் எடுத்துரைத்துவிட்டேன். ஐஎஸ்எஸ் நிர்வாகம் தனிப்பட்ட முறையில் வேறு இடங்களில் பயிற்சி மையத்தை அமைத்துக் கொள்ளக் கூடாதா? தடகள வீரர்/ வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வதற்கு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், சென்னை, பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் ஐஎஸ்எல் போட்டிகளை நடத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாகவும், விளையாட்டு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறிவிட்டேன் என்றார் அஞ்சு பாபி ஜார்ஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.