பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

இன்டியன் வெல்ஸ் போட்டியில் முன்னணி வீரரை வீழ்த்திய இந்தியாவின் யூகி பாம்ப்ரி!

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, உலகின் 12-ம் நிலை வீரரான லுகாஸ் புய்லேவைத் தோற்கடித்து...

News image
Updated On :12 மார்ச் 2018, 7:26 am

எழில்

அமெரிக்காவில் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, உலகின் 12-ம் நிலை வீரரான லுகாஸ் புய்லேவைத் தோற்கடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற 2-ம் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியும் பிரான்ஸின் முன்னணி வீரரும் தரவரிசையில் 12-வது இடத்திலும் உள்ளவருமான லுகாஸ் புய்லேவும் மோதினார்கள். லுகாஸ் எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது அற்புதமான ஆட்டத்தால் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி வென்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றில் விளையாடுவது கடந்த 9 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். கடைசியாக யூகி பாம்ப்ரி கடந்த 2009-ல் மியாமி மாஸ்ட்ர்ஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.