சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

வீரர்களை பெவிலியனுக்குத் திரும்புமாறு அழைத்த வங்கதேச கேப்டனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

பவுண்டரி லைன் அருகே கடும் கோபத்தில் இருந்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பெவிலியன் திரும்புமாறு தனது பேட்ஸ்மேன்களை அழைத்தார்...

News image
Updated On :17 மார்ச் 2018, 5:14 am

எழில்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

வங்கதேச இன்னிங்ஸின்போது கடைசி ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசப்பட்டது. இரண்டாவதாக வீசப்பட்ட பந்தை ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் என சிக்னல் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் இதை மற்றொரு நடுவர் அங்கீகரிக்க மறுத்தார். கடைசியில் அந்தப் பந்து நோ பால் அல்ல என முடிவு செய்யப்பட்டது. இதனால் டிரிங்ஸ் கொண்டு வந்த வங்கதேச சப் ஃபீல்டர்ஸூக்கும், இலங்கை ஃபீல்டர்ஸூக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இரு தரப்பினரையும் நடுவர்கள் சமாதானம் செய்ய முயலும்போது, பவுண்டரி லைன் அருகே கடும் கோபத்தில் இருந்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பெவிலியன் திரும்புமாறு தனது பேட்ஸ்மேன்களை அழைத்தார்.

 இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி அவர்கள் வெளியேறியிருந்தால் வங்கதேசம் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும். எனினும், ஒருவழியாக கேப்டன் ஷாகிப் சமாதானம் ஆனார். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினார்கள். பின்னர் பேட் செய்த மஹ்முதுல்லா பவுண்டரி, சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். எனினும் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஷாகிப், தான் வீரர்களை பெவிலியனுக்குத் திரும்புமாறு அழைக்கவில்லை. நான் இன்னும் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டிருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

நடுவர்களின் தீர்ப்பை மதிக்காமல் வீரர்களை பெவிலியன் திரும்புமாறு அழைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி கடுமையான தண்டனை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நாளை நடக்கும் இறுதிச்சுற்று ஆட்டத்தைத் தவறவிடவும் வாய்ப்பு உண்டு. ஐசிசி தன்னுடைய முடிவை இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.