எல்கர் 141*: தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள்!
2-ம் நாள் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை சொற்ப ரன்களில் சரிந்தபோதும், தொடக்க வீரர் டீன் எல்கர் கடைசிவரை நிலைத்து நின்று அணிக்கு உதவியுள்ளார்.
கேப் டவுனில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் நாள் முடிவில் 87 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. எல்கர் 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 121, ககிசோ ரபாடா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்று ஆட்டத்தைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி, 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டீன் எல்கர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 300-ஐ தாண்ட பெரிதும் உதவினார். ரபாடா 42 பந்துகள் தாக்குப்பிடித்து 22 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2-ம் நாள் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 4, பான்கிராப்ட் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரபாடா, மார்கல் ஆகிய இருவரும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...