டி20: இந்திய மகளிர் அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்த ஆஸி. வீராங்கனை!
ஆஸி. வீராங்கனை மீகன் ஷட் அற்புதமாகப் பந்துவீசி ஹாட்ரிக் எடுத்துள்ளார். 2-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில்...


இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வி. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய மகளிர் அணி.
இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 186 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீராங்கனை மூனி 46 பந்துகளில் 71 ரன்களும் வில்லானி 42 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து அசத்தினார்கள். எனினும் ஒரு வீராங்கனையாலும் இன்று சிக்ஸர் அடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தபோது ஆஸி. வீராங்கனை மீகன் ஷட் அற்புதமாகப் பந்துவீசி ஹாட்ரிக் எடுத்துள்ளார். 2-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் மந்தனாவையும் மிதாலி ராஜையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதன்பிறகு 5-வது ஓவரை வீசவந்த வேகப்பந்துவீச்சாளர் ஷட், தீப்தி ஷர்மாவை 2 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதனால் இந்திய அணி 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...