பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமன் திடீரென ராஜிநாமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் மீது ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்ட், 9 மாதங்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் மேல்முறையீடு செய்ய 3 வீரர்களுக்கும் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை தடை விதித்தது.
அணி வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டேரன் லேமன் மீது தவறும் இல்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு கூறியுள்ளது. இதனால், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனினும் ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமன் திடீரென ராஜிநாமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை தொடங்கும் கடைசி டெஸ்டுடன் விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார். வீரர்களிடமிருந்து விடைபெற வேண்டும் என்று நான் எடுத்த முடிவு மிகவும் கடினமானது என்று அவர் கூறியுள்ளார்.
2013 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக லேமன் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் 2019 வரை உள்ளது. 2019-ம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளப்போவதில்லை என்று அவர் முன்பே பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் அவருடைய இந்த அறிவிப்பு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


