தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுபடுவதைக் காண ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்! (விடியோ)

தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள்...

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 5:11 am

எழில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் எந்தளவுக்கு விரும்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி

சென்னைக்கு வந்திறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரசிகர்கள் இதைக் காண அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. நேற்று எப்படியும் பத்தாயிரம் ரசிகர்கள் குவிந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தோனி பேட்டிங் செய்யும்போதும் பந்துவீச்சில் ஈடுபடும்போதும் ரசிகர்கள் கரகோஷம் மிக அதிகமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்குபெறுவதால் சென்னை ரசிகர்கள் சிஎஸ்கே போட்டிகளையும் வீரர்களையும் நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக் சஹர், சிஎஸ்கே இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில், மிகப்பெரிய ரசிகர்களின் கூட்டம் பயிற்சியைக் காணவே வந்துள்ளது. எனவே பயிற்சியில் ஈடுபடுவதே நிஜமான ஆட்டத்தில் விளையாடுவதுபோல உள்ளது. ரசிகர்களின் ஆர்வம் நம்பமுடியாததாக உள்ளது என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.