ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் விலகல்!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்...

News image
Updated On :30 மார்ச் 2018, 8:58 am

எழில்

காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 9.40 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குத் தேர்வானார் ஸ்டார்க். இந்நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலிருந்து விலகியுள்ள ஸ்டார்க், ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, கொல்கத்தா அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும் ஐபிஎல் போட்டியிலிருந்து மூன்றாவது வருடமாக பங்கேற்காமல் உள்ளார் ஸ்டார்க். 

கிறிஸ் லின், ஆண்ட்ரே ரஸல் ஆகிய வீரர்கள் ஏற்கெனவே காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.