நீங்கள் அழ வேண்டும் என்று உலகம் விரும்பியது: ஸ்மித்துக்கு அஸ்வின் ஆறுதல்!
3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தின்போது சொரசொரப்பு தன்மைகொண்ட ஒரு பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்த பான்கிராஃப்ட் முயன்றது கேமராவில் பதிவாகி...


ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வசமானது. கடந்த 22-ம் தேதி தொடங்கிய 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தின்போது சொரசொரப்பு தன்மைகொண்ட ஒரு பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்த பான்கிராஃப்ட் முயன்றது கேமராவில் பதிவாகி மைதானத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிபரப்பானது. இதையடுத்து, அந்தப் பொருளை பார்கிராப்ட் தனது உடையில் மறைக்க முயன்றார். பின்னர், இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பான்கிராஃப்டும் ஒப்புக் கொண்டனர்.
அத்துடன், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்து முறையே ஸ்மித் மற்றும் வார்னர் விலகுவதாக அறிவித்தனர். கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தினார். இதை விசாரித்து வந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாத காலமும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் ஆட்டம் முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி விடுவேன் என்று கலங்கிய கண்களுடன் டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஸ்பான்சர்ஷிப் நிறுவனமான மெக்கெல்லன், தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கும் மாகெல்லன் நிறுவனம்தான் கடந்த ஆண்டில் ஸ்பான்சர் செய்தது. அதேநேரத்தில், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய வீரர்களுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை 'ஆஸிக்ஸ்' நிறுவனம் முடித்துக் கொண்டது.பந்தின் தன்மையை மாற்ற முயன்றதால் இந்த நடவடிக்கையை இந்த நிறுவனங்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்ததாவது:
ஸ்மித், உலகம் நீங்கள் அழ வேண்டும் என்று விரும்பியது. நீங்கள் அழுது முடித்தபிறகு அவர்கள் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். புரிந்துணர்வு என்பது வார்த்தையாக மட்டும் அல்லாமல், மக்களிடம் இருந்திருக்க வேண்டிய ஓர் உணர்வு. கடவுள் ஸ்மித்துக்கும் பான்கிராஃப்டுக்கும் வார்னருக்கும் இதை எதிர்கொள்ள சக்தியை அளிக்க வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் அவர்களுக்கு வேண்டிய ஆதரவை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...