ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு மும்பை அணி 182 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல்லின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 182 ரன்களை வெற்றி இலக்காக்க நிர்ணயித்துள்ளது.


மும்பை: ஐபிஎல்லின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 182 ரன்களை வெற்றி இலக்காக்க நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிறு மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 9.2 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது எவின் லெவிஸ் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ரன்களை எடுக்கத் திணறியது. அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா ஒரு முனையில் நிலைத்து ஆட, கடந்த போட்டியில் அதிரடி காட்டிய குருணால் பாண்டியா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளித்து ரன்கள் எடுக்க திணறினார்கள்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...