டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

உபேர் கோப்பை: இந்தியா வெற்றி

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற ஆட்டக்கணக்கில் ஆஸி. அணியை வீழ்த்தியது.

Updated On :21 மே 2018, 8:08 pm

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற ஆட்டக்கணக்கில் ஆஸி. அணியை வீழ்த்தியது.
உலக குழு சாம்பியன் போட்டி (தாமஸ், உபேர் கோப்பை) பாங்காக்கில் நடந்து வருகிறது. ஏற்கெனவே இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ், கனடாவிடம் தோல்வியுற்றது.
இதற்கிடையே திங்கள்கிழமை நடைபெற்ற உபேர் கோப்பை ஆட்டத்தில் சாய்னா நேவால் தலைமையிலான மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸியை வென்றது.
சாய்னா 2-0 என்ற செட்கணக்கில் சுவான்வெண்டி சென்னை வென்றார். வைஷ்ணவி ரெட்டி 2-0 என்ற கணக்கில் ஜெனிபர் டாமை வீழ்த்தினார். அனுரா பிரபுதேசாய் 2-0 என எசிலி பங்கையும், இரட்டையர் பிரிவில் சனியோகிதா-கோர்பட இணை வென்றது. ஆனால் மற்றொரு இணையான மேக்னா-பூர்விஷா தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற அடுத்து ஜப்பானை இந்தியா வெல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.