சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டி வில்லியர்ஸ் திடீர் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்...

News image
Updated On :23 மே 2018, 12:16 pm

எழில்

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது:

நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். இது மிகவும் கடினமான முடிவாகும். நன்கு விளையாடும்போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று எண்ணினேன். இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றிகளுக்குப் பிறகு, ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என எண்ணுகிறேன். டைடன்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். டு பிளெஸ்ஸிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று கூறியுள்ளார்.

114 டெஸ்டுகளில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், 8765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 சதங்களும் 46 அரை சதங்களும் அடங்கும். 228 ஒருநாள் ஆட்டங்களில் 9577 ரன்களும் 78 டி20 ஆட்டங்களில் 1672 ரன்களும் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.