புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

5வது ஒருநாள்: டக் அவுட் ஆன இரு வீரர்கள்! மே.இ. அணி தடுமாற்றம்!

மே.இ. அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2018, 8:48 am

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. மே.இ. அணியில் நர்ஸுக்குப் பதிலாக பிஷு சேர்க்கப்பட்டுள்ளார். ஹேம்ராஜுக்குப் பதிலாக ஒஷானே தாமஸ் இடம்பெற்றுள்ளார். 

மே.இ. அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பவல் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மே.இ. அணியின் முக்கிய வீரரான ஹோப்பும் ரன் எதுவும் எடுக்காமல் பூம்ராவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். முதல் 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே வீசி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் பூம்ரா. இதனால் மே.இ. அணி மேலும் சரிவு ஏற்படாமல் இருக்கப் போராடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.