ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, இந்த சீசனில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 7 அணிகளுடன் மொத்தம் 37 அணிகள் களம் காண்கின்றன. புதிதாகக் களம் காணும் மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிúஸாரம், உத்தரகண்ட், சிக்கிம், நாகாலாந்து, மேகாலயம், பிகார், புதுச்சேரி ஆகிய அணிகள் சமீபத்தில் நிறைவடைந்த விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்றிருந்தன.
கடந்த வருடம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன்மூலமாக 7 முறை சாம்பியனான தில்லியை வென்று தனது முதல் ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது விதர்பா.
இந்நிலையில் இந்த வருட ரஞ்சிப் போட்டியில் இச்சாதனைகள் நிகழ்த்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
* அதிக ரஞ்சி ஆட்டங்களில் இடம்பெற்றவர் என்கிற பெருமை தேவேந்திர பண்டேலாவுக்கு உள்ளது. அவர் 145 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்த வருடம் 8 ஆட்டங்களில் வாசிம் ஜாஃபர் விளையாடிவிட்டால் பண்டேலாவின் சாதனையை முறியடித்துவிடுவார்.
* ரஞ்சிப் போட்டியில் அதிக வருடங்கள் விளையாடியவர் சந்திரசேகர் சர்வேட் 1936-37 முதல் 1968-69 வரை அவர் 29 வருடங்கள் தொடர்ந்து ரஞ்சிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். வாசிம் ஜாஃபர் இந்த வருடம் தனது 22-வது ரஞ்சி சீஸனில் பங்கேற்கவுள்ளார். அவர் 1996/97 முதல் ரஞ்சிப் போட்டியில் விளையாடி வருகிறார். 2016-17 சீஸனில் மட்டுமே அவர் விளையாடவில்லை.
* ரஞ்சிப் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையை அடையவுள்ளார் வினய் குமார். இன்னும் 17 விக்கெட்டுகள் எடுத்தால் சாதனையாளர் ஆகிவிடுவார்.
* விக்கெட் கீப்பர்களில் அதிக டிஸ்மிஸல்களைக் கொண்டவர், விநாயக் சமந்த். 335. ஆனால் அவருடைய சாதனையை முறியடிக்க நமன் ஓஜாவால் முடியும். அதற்கு இன்னும் 16 டிஸ்மிஸல்களே மட்டுமே அவருக்குத் தேவை.
* தற்போதுதான் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார் ஷபாஸ் நதீம். ஆனால் ரஞ்சிப் போட்டியில் அவர் மூத்த வீரர். இன்னும் 6 விக்கெட்டுகள் எடுத்தால் ரஞ்சிப் போட்டியில் 300 விக்கெட்டுகளை எடுத்த பெருமையை அடைவார்.
* இன்னும் 16 ரன்கள் எடுத்தால் ரஞ்சிப் போட்டியில் மட்டும் 6000 ரன்கள் எடுத்த பெருமையை அடைவார் தினேஷ் கார்த்திக். அங்கித் பாவ்னே, மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் இந்த சீஸனில் 5000 ரன்களை எடுக்கவுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


