மேட்ச் பிக்ஸிங் முறைகேடு, ஊழல் பிரச்னை தொடர்பாக இந்தியாவின் உதவியை கோரியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
இதுதொடர்பாக இலங்கையின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சருமான அர்ஜுண ரணதுங்க திங்கள்கிழமை கூறியதாவது:
மேட்ச் பிக்ஸிங் பிரச்னை தொடர்பாக இந்தியா உதவ முன்வந்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் நிலவி வரும் முறைகேடுகள், ஊழல்களை களைய இந்தியாவின் சிபிஐ அமைப்பது தொழில்நுட்ப உதவி புரியும். மேலும் கிரிக்கெட்டில் சூதாட்டத்தை ஒழிக்க வகுக்க வேண்டிய விதிமுறைகளும் ஏற்படுத்தப்படும். சட்ட வரையறையை உருவாக்கித் தர இந்தியா முன்வந்துள்ளது.
கடந்த மே மாதம் கிரிக்கெட் முறைகேடு தொடர்பாக ஒரு டாக்குமெண்டரி படம் ஒளிபரப்பான நிலையிலும், காலே மைதான பொறுப்பாளர் தரங்கா, கிரிக்கெட் வீரர் தரிண்டு மெண்டிஸ் ஆகியோர் மூன்று நாள்களில் டெஸ்ட் முடிவை நிர்ணயிக்க ஏதுவாக பிட்சை அமைப்பது என மேட்ச் பிக்ஸிங் புகார் கூறப்பட்டது. இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சனத் ஜெயசூர்யா உள்பட பலர் மீது ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்பாட் பிக்ஸிங் புகார்: அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளியான ஸ்பாட் பிக்ஸிங் புகார்களை இங்கிலாந்து, ஆஸி. நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் நிராகரித்து விட்டன.
கடந்த 2010 முதல் 2012 வரையில் நடைபெற்ற 7 ஆட்டங்களில் இங்கிலாந்து அணியில் சிலவீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டனர். அதற்கான ஆதாரம் தங்கள் வசம் உள்ளது என óல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்தது.
மேலும் பெயர் குறிப்பிடாத சில ஆஸி. பாக். கிரிக்கெட் வீரர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர் என ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான டாக்குமெண்டரி படத்தில் கூறப்பட்டிருந்தது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஸ்பாட் பிக்ஸிங் புகார்களை நிராகரித்துள்ளது. எங்கள் வாரிய உண்மை கண்டறியும் குழு வீரர்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

