அதிக தங்கம், அதிகப் பதக்கங்கள்: ஆசியப் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய வீரர்கள்!

இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது...
அதிக தங்கம், அதிகப் பதக்கங்கள்: ஆசியப் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய வீரர்கள்!
Published on
Updated on
1 min read

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். பதக்கப் பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஜப்பான் (75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம், மொத்தம் 205) 2-ஆம் இடத்தையும், தென் கொரியா (49 தங்கம், 58 வெள்ளி, 70 வெண்கலம், மொத்தம் 177) 3-ஆம் இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம், 24 வெள்ளி, 43 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது. பதக்கப்பட்டியலில் சிரியா ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் கடைசி இடத்தை (37) பிடித்தது.

இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 24 வெள்ளிப் பதக்கங்கள் வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.

ஆசியப் போட்டியில் அதிக தங்கம்: இந்தியா

15  புது தில்லி 1951
15 ஜகார்த்தா 2018
14  குவாங்ஸா 2010
13 புது தில்லி 1982
12 ஜகார்த்தா 1962
11 பாங்காங் 1978
11 பூசான் 2002
11 இன்சியான் 2014
10 தோஹா 2006

அதிகப் பதக்கங்கள்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

69 ஜகார்த்தா 2018
65 குவாங்ஸா 2010
57 புது தில்லி 1982
57 இன்சியான் 2014
53 தோஹா 2006
52 ஜகார்த்தா 1962
51 புது தில்லி 1951

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com